இந்தியா

பிரதமர் மோடி காட்டும் வழியில்தான் செல்வேன்: எனக்கென எந்த விருப்பங்களும் கிடையாது: நிதின்கட்கரி திட்டவட்டம் !

தேர்தல் நேரத்தில் சிண்டு முடியும் வேலைகளில் காங்கிரஸ் உட்பட கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும், பிரதமர் பதவி மீது, எனக்கு ஆசை இல்லை. என்னை பிரதமராக்கும் திட்டம், ஆர்.எஸ்.எஸ்.,சிடமும் இல்லை,” என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் பிரதமர் மோடி மீது உள்ள வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்படுத்த நிதின் கட்கரியை பயன்படுத்தி வருகின்றனர். மோடியை சிறுமை படுத்த வேண்டும் என்பதற்காக பாஜகவின் சீனியர் அமைச்சரும், முன்னாள் பாஜக தலைவருமான அவரை தனிப்பட்ட முறையில் பாராட்டி பேசி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்  

‘வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மோடிக்கு பதில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பிரதமர் பதவியில் அமர்த்தப்படலாம்’ என்ற யூகங்களையும் காங்கிரசார் கிளப்பிவிட்டு வருகின்றனர்.

 இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நிதின் கட்கரி நேற்று கூறியதாவது: பிரதமர் பதவியில் எனக்கு விருப்பம் இல்லை. அந்த திட்டத்தோடு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் காய்களை நகர்த்தவில்லை. எந்தவித இலக்கையும் நிர்ணயிக்காமல், கணக்கு போடாமல், உழைத்து வருகிறேன். அரசியலிலும், தனிப்பட்ட முறையிலும், என் வழி இதுதான். எனக்கு இட்ட பணிகளை நிறைவேற்றுவேன்.

பாதை போகும் வழியில் செல்கிறேன். நாட்டு நலனுக்காக கடமை ஆற்றுவதில் நம்பிக்கை உள்ளவன் நான். இவற்றை என் உள்ளத்தில் இருந்து நான் கூறுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு பின், நானும், பா.ஜ.,வின் பிற தலைவர்களும் அணிவகுத்து நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags
Show More
Back to top button
Close
Close