இந்தியா

உலகிலேயே இந்தியாவில்தான் 1GB டேட்டா கட்டணம் மிகவும் குறைவு – இங்கிலாந்து ஆய்வு நிறுவனம் தகவல் !

Cable.co.uk எனும் இணையத்தளத்தில் ஒரு கிகா பைட் அளவிலான டேட்டாவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு செலவாகிறது என்பது  குறித்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

உலக அளவில் மக்கள் செல்பேசி டேட்டாவுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்த அந்த ஆய்வில் ஐரோப்பாவில்தான் மக்கள் டேட்டாவுக்கு அதிகம் செலவு செய்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. உலகில் 230 நாடுகளில் செல்பேசி டேட்டாவுக்கு எவ்வளவு கட்டணம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து கூறுகிறது இந்த ஆய்வு.

இதில் இந்தியாவில் மிகக்குறைவான விலையில் டேட்டா கிடைப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டா $0.26 கட்டணத்திற்கு கிடைக்கிறது. அதுவே பிரிட்டனில் $6.66 என்ற கட்டணத்திற்கு கிடைக்கிறது.

அமெரிக்காவில் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் மிக அதிகம். அங்கே சராசரியாக ஒரு ஜிபிக்கு $12.37 செலவு செய்ய வேண்டியுள்ளது.

இதில் பிரிட்டன் 136-வது இடத்தில் உள்ளது. ஒரு ஜிபி உலக அளவில் சராசரியாக $8.53க்கு விற்கப்படுகிறது.

கிழக்கு ஐரோப்பாவில் ஃபின்லாந்தில்தான் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் மலிவாக கிடைக்கிறது. அங்கே ஒரு ஜிபி டேட்டாவை 1.16 டாலருக்கு பெற்றுவிடலாம். இத்தாலி, டென்மார்க், மொனாகோ போன்றவற்றில் இரண்டு டாலருக்கும் குறைவான விலையில் ஒரு ஜிபி கிடைக்கும். மேற்கு ஐரோப்பாவில் போலந்தில் ஒரு ஜிபியின் கட்டணம் 1.32 டாலர்கள். ருமேனியாவில் 1.89 டாலர்கள்.

குறைவான விலை பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் நாடு இந்தியா  இந்தியா – 0.26 டாலர், அதற்கடுத்தபடியாக கிர்கிஸ்தான் – 0.27 டாலர், கஜகஸ்தான் -0.49 டாலர், உக்ரேன் – 0.51 டாலர், ருவாண்டா -0.56 டாலர்

அதிக விலை பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நாடுகள் எவை? ஜிம்பாபேவே – 75.20 டாலர், ஈகுவடோரியல் கினி – 65.83 டாலர், செயின்ட் ஹெலெனா – 55.47 டாலர், பாஃல்க்லாண்ட் தீவு – 47.39 டாலர், ட்ஜிபூட்டி – 37.92 டாலர்கள். டேட்டாவின் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் ஆசிய நாடுகளாகும். தைவான், சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில், உலகளாவிய சராசரியை விட சற்று அதிக கட்டணம் உள்ளன. 
இந்தியாவில் மக்கள் தொகை மிக அதிகம். அதுமட்டுமல்லாமல் மக்களில் கிட்டத்தட்ட அனைவருமே தொலைபேசியை பயன்படுத்துகிறார்கள். அதில் கணிசமானவர்கள் இணையதள விரும்பிகளாக உள்ளனர். மேலும் இங்கு செல்போன் சேவைதாரர்கள் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்பட்டுவரும் போட்டியும் விலை குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிக கட்டமைப்பை வைத்துள்ள நிறுவனங்கள் மிகக் குறைந்த விலைக்கு வழங்க முன்வருவதால் சேவை நிறுவனங்கள் குறைந்த இலாபத்தில் அதிக சமயம் அதிக விற்பனையை செய்து வருகின்றன.

i

Tags
Show More
Back to top button
Close
Close