செய்திகள்

வெல்கம் கேப்டன், நாற்பதும் நமதே : H ராஜா நம்பிக்கை

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பா.ஜ.க தேசிய செயலாளர் திரு H ராஜா அவர்கள், “வெல்கம் கேப்டன். 2014 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அனைவரும் சேர்ந்து ஆளும் அ.இ.அ.தி.மு.க-வுடன் ஒரு மெகா கூட்டணி அமைந்துள்ளது. அன்று NDA வை விட தி.மு.க விற்கு வெறும் 2% வாக்குகளே அதிகம் என்பது உலகறிந்த விஷயம். எனவே தி.மு.க + காங்கிரஸ் 4%, மக்கள் நல கூட்டணி 2% அவ்வளவு தான். கடுமையாக உழைப்போம் 40 ம் நமதே”, என்று பதிவிட்டுள்ளார்.

Tweet by H Raja
Tags
Show More
Back to top button
Close
Close