சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் அ.தி.மு.க-தே.மு.தி.க இடையே கூட்டணி உடன்பாடு குறித்து இன்று மாலை முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேமுதிக சார்பில் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை சுமூகம் அடைந்ததை அடைந்ததை இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. ஒப்பந்தத்தில் விஜயகாந்தும், ஓ.பன்னீர்செல்வமும் கையொப்பமிட்டனர் . தே.மு.தி.க-வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இருதரப்பும் மகிழ்ச்சியுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். விஜயகாந்த் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. ஏதோ கூற முற்பட்டார். ஆனால் பிரேமலதா விஜயகாந்த் அவர் சார்பில் ஒப்பந்தத்திற்கு திருப்தி தெரிவித்தார். நாற்பது தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெற பாடுபடப் போவதாகக் கூறினார்.

Share