தமிழ் நாடு

பாஜகவினர் மீது கம்யூனிஸ்டுகள் கொடூர தாக்குதல்! 5 பேர் படுகாயம், கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதம் !

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே இருமாநில எல்லைப் பகுதியில் பிஜேபி, கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே நிகழ்ந்த மோதலில் வீடுகள், கடைகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

பாறசாலை பகுதியில் இரவு பாஜக பிரமுகர் ஒருவர் வீட்டில் அக்கட்சியின் தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அங்கு சென்று பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் படுகாயமடைந்து நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காலை இருதரப்பினரிடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் வீடுகள், அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close