தமிழ் நாடு

விமர்சியாக நடைபெற்ற #TNNamoWarriors பொதுக்கூட்டம் : நிர்மலா சீதாராமன், தமிழிசை ஆகியோர் பங்கேற்பு

தமிழக பா.ஜ.க சமூக வலைதள ஆதரவாளர்களை ஒன்று திரட்டும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் tnnamowarriors.com இணையதளம். இதன் மூலம் ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டு, அவர்களுக்கான கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறப்புரை ஆற்றினார். தமிழக பா.ஜ.க தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாநில சமூக ஊடக பிரிவு தலைவர் திரு சி.டி.ஆர் நிர்மல் குமார் அவர்களுக்கும், கே.டி. ராகவன் அவர்களுக்கும் வாழ்த்துக்களை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துக்கொண்டார்.

Tweet by Nirmala Sitharaman

இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தமிழ்நாடு நமோ வாரியர்ஸ் மாபெரும் சமூக ஊடக கூட்டத்தில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றினேன்.#மீண்டும்மோடி அவர்களின் ஆட்சியமைய சமூக ஊடகங்கள் பாரதப்பிரதமர் மோடி அவர்களின் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக எடுத்துச்செல்ல வேண்டுமென்று உரையாற்றினேன்”, என்று பதிவிட்டுள்ளார்.

Tweet by Tamilisai Soundararajan

இது வரை சமூக வலைதளங்களில் பா.ஜ.க-விற்கு ஆதரவாக பதிவிட்டு நண்பர்கள் ஆனவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக்கொண்டு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/ashwinkkrish/status/1104673397445877760?s=19
Tags
Show More
Back to top button
Close
Close