செய்திகள்

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரனால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றம்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சமையல் கலைஞர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். இதற்காக திருபுவனம் அருகாமையில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பது வழக்கம்.

தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தனது பணியாளர்களை ராமலிங்கம் தயார்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர். ராமலிங்கத்தின் தொழிலாளர்களிடம் மதம் மாறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது அதை கண்டித்துப் பேசிய அவர் பணி முடிந்து இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி வழியாக செல்லும்போது கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இது தொடர்பாக இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான பி.எப்.ஐ (P.F.I) இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கு என்.ஐ.ஏ (N.I.A) எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.

Republic TV Reports : NIA to probe Ramalingam case
Tags
Show More
Back to top button
Close
Close