மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 17-வது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை மற்றும் தேதியை இன்று மாலை குறிப்பிட்டபடி 5 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

மக்களவைத் தேர்தல், ஏப்ரல், மே மாதத்தில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஒரே நாளில் ஏப்ரல் 18  ந்தேதி நடைபெறவுள்ளது. மற்ற விபரங்கள் தொடர்ந்து அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையர் அறிவித்தவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிடும். அதன்பின் எந்தவிதமான திட்டங்களையும், அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட முடியாது.

நடப்பு மக்களவையில் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதி முடிகிறது என்பதால், அதற்குள் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது

Share