செய்திகள்

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மசூத் அசாரை விடுவிக்கப்பட்ட காரணம் இது தான்? இராகுல் காந்திக்கு இல. கணேசன் பொளேர்

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் யார் ஆட்சி காலத்தில் விடுதலை செய்யப்பட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஏதோ வரலாற்று ரகசியத்தை கண்டுபிடித்துபோல கேள்வி கேட்டுள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானில் காந்தகார் நகருக்கு கடத்தி சென்றனர். விமானத்தில் பயணித்த பயணிகளை விடுவிப்பதற்காக இந்திய சிறையில் இருக்கும் மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.

காங்கிரஸ் தூண்டுதலின் பேரில் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் பிரதமர் வீட்டு முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இறுதியில் வேறு வழியின்றி மசூத் அசாரை விடுதலை செய்ய நேரிட்டது. எனவே சிறையில் இருந்து மசூத் அசாரை  விடுவிக்க  காங்கிரஸே  முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

மசூத் அசார் விடுதலை பற்றி கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி, மும்பை, கோவை குண்டுவெடிப்பு யார் காலத்தில் நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இவ்வாறு  அவர் கூறினார் .

Tags
Show More
Back to top button
Close
Close