ஊடக பொய்கள்

புதிய தமிழகம் கட்சியினர் தி.மு.க-வில் இணைந்ததாக செய்தியை திரித்து வெளியிடும் ஊடகங்கள்

டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் தி.மு.க-வில் இணைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tweet by Nakkheeran

இவர்கள் தி.மு.க-வில் இணைந்ததால் ஒரு தொகுதி அனாமத்தா போச்சே என அ.தி.மு.க அதிர்ச்சியில் உள்ளது என்று மற்றொரு ஊடகம் மிகவும் உருக்கமாக செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் நெல்லையில் கிருஷ்ணசாமி கட்சி காலி என்று செய்தி வெளியிட்டுள்ளது ஆச்சிரியமாகவும், அறியாமையின் வெளிப்பாடகவும் தான் தெரிகிறது.

Tweet by Asianet Tamil

தற்போது இந்த செய்தியின் உண்மை நிலையை பார்ப்போம். புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த ஜெயக்குமார் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள் முதல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியில் ஈடுபாடு காட்டாததாலும், கட்சி விரோத நபர்களுடன் தொடர்பில் இருந்ததாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

Source : Facebook/Dr. Krishnasamy

ஆனால், கட்சி பொறுப்பில் இருப்பவர் கட்சியை விட்டு நீங்கி தி.மு.க-வில் இணைந்துள்ளது போன்றும் இதனால் புதிய தமிழகம் கட்சிக்கும் அ.தி.மு.க கூட்டணிக்கும் பலவீனம் ஏற்பட்டுள்ளது போன்றும் ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிட்டுள்ளன. இதனை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி.

Tweet by Dr. Shyam Krishnaswamy

சில வாரங்களுக்கு முன்பு பா.ம.க இளைஞர் அணி தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்களை பத்திரிக்கையாளர்கள் குறி வைத்து கேள்வி கேட்டதும், சில தினங்களுக்கு முன்பு, தே.மு.தி.க-வின் ப்ரேமலதா விஜயகாந்த் அவர்களை பத்திரிக்கையாளர்கள் குறி வைத்து கேள்வி கேட்டதும், தற்போது புதிய தமிழகம் கட்சியை குறி வைத்து திரிக்கப்பட்ட செய்திகளை ஊடகங்கள் பரப்புவதும், அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்னதாக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள், தி.மு.க-வை இகழ்ந்து பேசி வந்த வைகோ தற்போது தி.மு.க கூட்டணியில் உள்ளது பற்றி ஊடகங்கள் ஏன் கேள்வி கேட்பதில்லை என்று பத்திரிக்கையாளர்களை கேட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close