அரசியல்தமிழ் நாடு

பிரேமலதா விவகாரத்தில் வாய் கிழிய வியாக்கியானம் பேசிய வைகோ… தன் யோக்கியதை என்ன என்பதை நிரூபித்த வீடியோ.!

திருச்சி மாவட்ட ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது தவறானது. அதை திருத்திக்கொள்ள வேண்டும். கருணாநிதியை சந்திக்க விஜயகாந்த் நேரம் கேட்டபோது ஸ்டாலின் நிச்சயம் மறுத்திருக்க மாட்டார். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தே.மு.தி.க வினர் முற்றுகையிட்டது கண்டனத்துக்குரியது. விபரீதத்தை விலைக்கு வாங்க வேண்டாம். உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டோம்’ என்று கூறினார்

அரசியலுக்காக இந்த அளவுக்கு வியாக்கியானம் பேசும் வைகோ, அவரே சில இடங்களில் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். அது தொடர்பான வீடியோக்கள் சர்வசாதாரணமாக கொட்டிக்கிடக்கிறது இணையதளங்களில். அப்படி இருக்கும் போது எப்படி இது போன்று எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் அவரால் பேச முடிகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Tags
Show More
Back to top button
Close
Close