பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலம் பொள்ளாச்சி முதல் மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக கமலாபுரம் வரையில் 131 .960 கி.மீ தொலைவுக்கு புதிய நான்குவழி புறவழிச்சாலை அமைக்கதிட்டமிட்டப்பட்டது.

இதில் திண்டுக்கல் புறவழிச்சாலை 30.903 கி.மீ தொலைவுக்கும் , ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை 34.22 கி.மீ தொலைவுக்கும், மடத்துக்குளம் புறவழிச்சாலை 6.83 கி.மீதொலைவுக்கும், உடுமலை புறவழிச் சாலை 21.94 கி.மீ தொலைவுக்கும் , பொள்ளாச்சி புறவழிச் சாலை 12.80 கி.மீ என 5 புறவழிச் சாலைகள் அமையவுள்ளன.

இதற்கான பூமி பூஜை ஆச்சிப்பட்டியில்நேற்று நடைபெற்றது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பூமி பூஜையை துவக்கிவைத்தனர். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி. மகேந்திரன், முன்னாள் அமைச்சர் தாமோதரன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி, நகர்மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணாகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த வழித்தடத்தில் பயணிக்க மக்கள் நெடுநாளாக சிரமப்பட்டு வந்தனர். இது அப்பகுதி மக்களின் பல ஆண்டு கால மனக்குமுறலுக்கு விடுவாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share