செய்திகள்

தி.மு.க-வினர் தூங்கிக்கொண்டு தான் இருப்பார்கள் : ஸ்டாலினின் தூக்கத்தை பற்றி சுதீஷ்

சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க தலைமையகத்தில், அக்கட்சியின் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குழு தலைவர் சுதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, துரைமுருகனை தனது கட்சி நிர்வாகிகள் சந்தித்ததில் கட்சி, அரசியல் தொடர்பாக எதுவும் இல்லை என்றார். ஆனால் துரைமுருகனுடன் 10 நாட்களுக்கு முன்னர் கூட்டணி தொடர்பாக பேசியது உண்மைதான் என்றும், நேற்று பேசவில்லை என்று தெரிவித்தார்.

துரைமுருகனுடன் என்ன பேசப்பட்டது என்பதை தெரிவிப்பது அரசியல் நாகரிகமில்லை என அவர் குறிப்பிட்டார். ஆனால் தே.மு.தி.க-வினர் கூட்டணிப் பேச்சுக்காக சந்தித்தனர் என துரைமுருகன் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, துரைமுருகன் அவரது கட்சி பற்றியும், கட்சித் தலைமை பற்றியும் தன்னிடம் கூறியதை தான் வெளியில் சொன்னால் அசிங்கமாகிவிடும் என கூறியதாக பாலிமர் செய்தி குறிப்பு கூறுகிறது. ஸ்டாலின் தூங்கிக்கொண்டிருந்தார் என்று துரைமுருகன் கூறியது பற்றி பேசுகையில், தி.மு.க-வினர் தூங்கிகொண்டு தான் இருக்க போகிறார்கள் என்று தடாலடியாக தெரிவித்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அனைவரும் கை தட்டி விசில் அடித்தனர்.

Tweet by News 7 Tamil

முதலில் தங்களுடன் பா.ஜ.க-தான் கூட்டணிப் பேச்சு நடத்தியது என்றும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி என்பதால் அக்கட்சியுடன் பேச்சை தொடங்க தாமதமாகி விட்டது என்றும் சுதீஷ் விளக்கமளித்தார்.

திடீரென பா.ம.க-வுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது என அ.தி.மு.க அறிவித்ததாகவும், அப்போதே தங்களுடனும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திடாதது வருத்தத்தை அளித்ததாகவும் அவர் கூறினார் எனவும் பாலிமர் செய்தி குறிப்பு மேலும் கூறுகிறது. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், ஓரிரு நாளில் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்றும் தே.மு.தி.க பேச்சுவார்த்தைக் குழு தலைவர் சுதீஷ் தெரிவித்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close