புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3 முறை பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியா சார்பிலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே பயங்கரவாதிகளும் அவ்வப்போது பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஹந்த்வாரா மாவட்டத்தில் கிரல்கந்த் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படை நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

மேலும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் – பாதுகாப்பு படை இடையேயான கடும் துப்பாக்கிச் சண்டையால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Share