தமிழ் நாடு

2 கட்சிகளுடன் பேசுவதில் என்ன தவறு.! சுதீஷ் அதிரடி.!

தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்து பேசினோம், மற்ற காரணங்கள் இல்லை என்று தேமுதிக நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மேலும், தேமுதிகவையும் இந்த கூட்டணியில் இணைப்பதற்கு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

ஆனால் தேமுதிக அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை கேட்டதால் கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
நேற்று சென்னை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆலோசனை நடத்தினர்.

அதில் தேமுதிக துணைச்செயலாளர் சுதீஷீம் கலந்து கொண்டர். இதனால் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயத்தில் தேமுதிக நிர்வாகிகளான இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்ட சிலர் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்குப் பின்னர் துரைமுருகன், தேமுதிக நிர்வாகிகள் சிலர் எனது இல்லத்துக்கு வந்தனர். உங்களோடு கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தனர்.

ஏன் அதிமுக கூட்டணியிலிருந்து வர விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு சரியான பதில் இல்லை. ஏதோ தவறாக இருப்பதாகப்பட்டது. கூட்டணியில் தேமுதிக இணைவது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்து பேசினோம். மற்றபடி அரசியல் பேசவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து இரண்டு நாட்களில் அறிவிப்போம் என்றும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் தொகுதி பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

நானும் துரைமுருகனும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர். பல முறை அவரை சந்தித்து அரசியல் பற்றி பேசியுள்ளோம். திமுக மற்றும் அதன் தலைமை பற்றி துரைமுருகன் பலவற்றை பேசினார்.

அவற்றை எல்லாம் என்னாலும் கூற முடியும். ஆனால் அரசியல் நாகரிகம் கருதி அதனை வெளிபடுத்தமாட்டேன்.
மேலும் ஒரே சமயத்தில் 2 கட்சிகளுடன் கூட்டணி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. அப்படி ஒன்றும் தவறாக இல்லையே என்றார்.

Tags
Show More
Back to top button
Close
Close