ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது, பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

இந்நிலையில், ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. பேருந்து நிலையத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. பேருந்தில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share