இந்தியா

பாகிஸ்தானின் மொத்த நம்பிக்கையும் சேதாரம் – அடுக்கடுக்காய் இந்தியா அடுக்கிய ஆதாரம் : பாராட்டி தள்ளும் உலக நாடுகள்..!

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இந்திய விமானப்படை மத்திய அரசிடம் வழங்கியது.

காஷ்மீர் புல்வாமாவில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ந் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாலகோட் என்ற இடத்தில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினரின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின. இந்த தாக்குதல் தொடர்பான உண்மைத்தன்மையை வெளியிட வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. சில ஊடகங்களில் குண்டுகள் இலக்கை தாக்காமல் தவறிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இதைத்தொடர்ந்து இந்திய விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரமாக ஒரு ஆவண தொகுப்பை மத்திய அரசிடம் வழங்கியது. அதில் 12 பக்கங்களுக்கு செயற்கைகோள்கள் மற்றும் இந்திய வான் பகுதியில் பறந்த புலனாய்வு விமானங்களில் இருந்து நவீன ரேடார்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்களும் உள்ளன.

இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 போர் விமானங்கள் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்பைஸ் 2000’ குண்டுகளை ஊடுருவிய இடங்களில் உள்ள இலக்குகள் மீது வீசின. அந்த குண்டுகள் இலக்கில் உள்ள கட்டிடங்களின் கூரைகளை துளைத்து உள்ளே சென்று வெடித்தன. இதனால் உள்ளே தான் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த வான் தாக்குதலில் 80 சதவீத குண்டுகள் சரியான இலக்கில் வீசப்பட்டன. 20 சதவீத குண்டுகள் மட்டுமே விளிம்புகளில் விழுந்ததாகவும் அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close