செய்திகள்

இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதல் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனை அல்ல : தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை

பாகிஸ்தானில் பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய வான் வழி தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினை அல்ல என்றும், அது பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கிப்பட்டுள்ளது. இந்தியாவின் நடவடிக்கையில் எந்த நாடும் குறுக்கீடு செய்யவில்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

பிப்ரவரி 26 ம் தேதி பாகிஸ்தானில் பாலக்கோட்டில் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத முகாம் மீது இந்தியா விமானத் தாக்குதலை நடத்தியதில் இருந்து, வெளிநாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு பாகிஸ்தான் தீவிரமாக முயல்கிறது.

விமானத் தாக்குதல்களைப் பற்றி குறிப்பிடும் போது, ​​இந்தியாவின் கவனம் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் மட்டுமே இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது” என்று அவர்கள் கூறினர்.

Tags
Show More
Back to top button
Close
Close