தமிழ் நாடு

வைகோவுக்கு ஒத்த சீட்டா… மதிமுகவிலிருந்து வெளியேறிய நிர்வாகி.!

திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் வரை எதிர்பார்த்த வைகோவுக்கு 1 சீட்டு மட்டுமே ஒதுக்கியுள்ளது திமுக. இதில் உடன்பாடு இல்லாததால் மதிமுகவை சேர்ந்த சீர்காழி நகர செயலர் அக்கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், ராஜ்யசபாவில் ஒரு சீட் ஒதுக்கி நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து நாகை மாவட்டம், சீர்காழி நகர, மதிமுக செயலாளர் பாலு கட்சியில் இருந்து விலகுவதாக, தன் முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்த பதிவில், மதிமுகவிற்கு லோக்சபா தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தளபதி ஸ்டாலின் அவர்களே, அண்ணன் வைகோவை எந்த இடத்திலும் கைவிட மாட்டேன் எனக் கூறிவிட்டு கழுத்தை அறுத்து விட்டீர்களே. மரண வலியுடன் பொதுக்குழுவை, நான் புறக்கணிக்கிறேன். கனத்த இதயத்துடன், ம.தி.மு.க.,வில் இருந்து வெளியேறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த வைகோ கவலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close