இந்தியா

பாகிஸ்தானால் பல நாடுகளின் பாதுகாப்பு அந்தரத்தில்… புல்வாமா தாக்குதலை தேர்தல் சதி என்று வதந்தி பரப்பிய போலி போராளிகளுக்கு சரியான சவுக்கடி..!

புல்வாமா தாக்குதலுக்கு முந்தைய தினம் ஈரான் – பாகிஸ்தான் எல்லையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலின்போது ஈரான் ராணுவத்தின் கமாண்டோ வீரர்கள் 27 பேர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் மீது  ஈரான் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஈரானில் தாக்குதல் நடத்தி கமாண்டோ வீரர்கள் 27 பேரை கொன்றுள்ளனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை ஈரான் கண்டித்துள்ளது. ஈரானில் தாக்குதல் நடத்திய அடுத்த நாளே இந்தியாவிலும் தாக்குதல் நடந்துள்ளது. இந்த இரண்டு தாக்குதல்களிலும் பாதுகாப்பு படை வீரர்களே கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் – ஈரான் எல்லைப் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஈரானைப் பொறுத்தளவில் அந்நாட்டை சுற்றிலும் எதிரிகள் உள்ளனர்.சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஈரானுக்கு எதிரான செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த இரு நாடுகளும் பாகிஸ்தானுடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் மூலமாக ஈரானில் இந்த தாக்குல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை ஈரான் ராணுவ தலைமை தளபதி முகம்மது அலி ஜாபரி கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், எதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுக்கிறது?. ஈரான் வீரர்களை கொன்றதற்காக உரிய விலையை பாகிஸ்தான் ராணுவம் கொடுக்க நேரிடும். கடந்த ஆண்டில் மட்டும் 7 தற்கொலைப்படை தாக்குதல்களை தடுத்து நிறுத்தியுள்ளோம்

சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரத்திற்கு தெரியும் ஈரான் பொறுமை இழந்து விட்டது’ என்று அவர் கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி துணை ராணுவத்தினர் 40 பேரை கொன்றுள்ளனர். இதேபோன்று ஈரானிலும் பாகிஸ்தான் வாலை ஆட்டி வருகிறது. இதற்கு பழிதீர்ப்போம் என ஈரான் எச்சரித்திருக்கிறது. இதனால் புல்வாமா தாக்குதலை மத்திய அரசை விமர்சித்து வந்த போலி போராளிகளுக்கு இந்த செய்தி முகத்தில் கரியை பூசியது போல பதிலடியாக அமைந்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close