தமிழ் நாடு

“என் தாய் வீட்டில் கிடைத்த சீதனம்”.! அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியை பெற்ற ஏ.சி.சண்முகம் நெகிழ்ச்சி..!

நேற்று இராயப்பேட்டை  அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக – புதிய நீதிக்கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி உடன்பாட்டை வாசித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் புதியநீதி கட்சி இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிவித்தார்.

21 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய நீதிக் கட்சி ஆதரவு அளிக்கும் என்றார். கூட்டணி குறித்து ஏ.சி.சண்முகம் கருத்து கூறுகையில், ” என் தாய் வீட்டில் கிடைத்த சீதனமாக இந்த ஒரு தொகுதியை கருதுகிறேன். என் தாய் வீட்டுக்கு வந்தது எனக்கு பெருமை அளிக்கிறது .

இரட்டை இல்லை சின்னத்தில் எனக்கு போட்டியிட அனுமதி வழங்கிய ஈபிஎஸ், ஓபிஎஸ் க்கு நன்றி கூறினார். ஏ.சி.சண்முகம் ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags
Show More
Back to top button
Close
Close