காஷ்மீரில் புல்வாமா பகுதியில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு வீட்டுக்குள் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இன்றைய தாக்குதலில் அப்தார் பயஸ், முகம்மது என்ற 2 பயங்கரவாதிகள் கொல்லலப்பட்டுள்ளனர்.

புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் இந்த சம்பவத்தால் இங்கு இன்டர்நெட் சேவை முழுவதும் தடை செய்யப்பட்டது. புல்வாமா பகுதியில்தான் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் காரை மோதச்செய்து வெடிகுண்டு வெடிக்க செய்தனர். இதில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

Share