தமிழ் நாடு

கன்னியாகுமரியில் புதிய துறைமுகம் : அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைக்கிறார்..!

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் சென்னை துறை முகங்களில் பங்களிப்புடன் ஒரு சிறப்பு நோக்க துறைமுகம் கன்னியாகுமரியில் புதிதாக உதயமாகிறது.

மாண்புமிகு கப்பல்துறை மற்றும் சாலை போக்குவரத்து  அமைச்சர் நிதின் கடகரி மற்றும் இணை அமைச்சர் மன்சுக் எல்.மன்டாவியா  காணொளிக் காட்சி மூலம் பங்கேற்பார்கள். மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் கவுரவ விருந்தினராக பங்கேற்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆசியுடன் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  புதிய துறைமுகத்தை இன்று மாலை 4.30 மணிக்கு, ஸ்ரீ லக்ஷ்மண்  கல்யாண மஹால், நாகர்கோவிலில்  தொடக்கி வைக்கிறார்கள். 

Tags
Show More
Back to top button
Close
Close