செய்திகள்

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் வருத்தம்!

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடாக இந்தியா இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில், அமெரிக்க பழமைவாதச் சங்கம் நடத்திய மாநாட்டில் பங்கேற்ற அவர், கொடியை அணைத்துக் கொண்டு உணர்ச்சிவசப்பட்டார்.

தேசிய சர்வதேசிய நிகழ்வுகள் என்கிற அந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு தொழிலதிபரான ஹார்லி டேவிட்சன் பேசுகையில் “இரு சக்கர வாகனத்திற்கு இந்தியாவில் 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்ததாக” குறிப்பிட்டார்.

இதையடுத்து  ட்ரம்ப் உரையாற்றினார். இந்தியாவை உச்சபட்ச வரி விதிக்கும் நாடு என்று ஆத்திரத்துடன் குறிப்பிட்ட அவர், இந்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த வரி 50 சதவீதமாக குறைக்கப்பட்டதாகவும், இருந்தும் அது போதுமானதல்ல எனவும் டிரம்ப் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் இரு சக்கரவாகனங்களுக்கு அமெரிக்காவில் 2 புள்ளி 4 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா வரி விதிப்பது போன்றே பதிலுக்கு அமெரிக்காவும் வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் கூறினார்.

இந்தியா தேவையற்ற இறக்குமதிகளை குறைத்து தமது நாட்டை இயன்றவரை சுய சார்புள்ள நாடாக மாற்றும் கொள்கையை கடந்த நான்கு ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறது, மேக் இன் இந்தியா திட்டத்தை அமல் படுத்துவதில் குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close