தமிழ் நாடு

ராமதாஸ் பற்றி பேச வைகோவுக்கு என்ன அருகதை இருக்கு.. ஓ.பி.எஸ்., மகன் கடும் தாக்கு.!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி மாவட்டம் லெட்சுமிபுரத்தில் நடைபெற்றது.

இந்த விழா துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் தேனி எம்.பி பார்த்திபன், மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பேசியதாவது: தினகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. தனக்குத் துரோகம் செய்துவிட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்கி வைத்திருந்தார் ஜெயலலிதா.

தேனி மாவட்டத்தில் பல பிரச்னைகள் வந்தது. முல்லைப்பெரியாறு பிரச்னை உட்பட அனைத்துப் பிரச்னைகளும் வந்தபோது தினகரன் எங்கே போனார்? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தினகரன் ஒரு வார்த்தை பேசியிருப்பாரா?

ஏனென்றால் ஜெயலலிதா மீது அவ்வளவு பயம். ஜெயலலிதா சிறைக்கு சென்றதுக்கு காரணம் தினகரன்தான். அனைவரையும் மாட்டிவிட்டுவிட்டு, தான் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்.

அதே போன்று பா.ம.க.வுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொடுத்து அக்கட்சிக்கு சின்னம் வாங்கிக்கொடுத்தவர் ஜெயலலிதா. சோனியா காந்தியிடம் கைகோர்த்து இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர் கருணாநிதி என்று பேசியவர் வைகோ. இன்று அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ராமதாஸ் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? இவ்வாறு அவர் பேசினார்.

Tags
Show More
Back to top button
Close
Close