தமிழ் நாடு

அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு கிணற்றில் மிதந்து யோகா செய்யும் வாலிபர்.!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், கோவையை சேர்ந்த ராஜா என்பவர், தொடர்ந்து இரண்டு மணி நேரம் யோகாசன முறையில் தண்ணீரில் மிதந்து, வித்தியாசமான முறையில் பிரார்த்தனை மேற்கொண்டார்.

கோவையில் தங்க நகை கடையில் வடிவைப்பாளராக பணியாற்றி வருபவர் ராஜா. இவர், எய்ட்ஸ் விழிப்புணர்வு, சிகரெட் புகைத்தலால் வரும் தீமை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணி கூட்டணி 40தொகுதிகளில் வெற்றி பெற வேண்டி, கோவை குணியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பத்மாசன நிலையில் தண்ணீரில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் மிதந்து பிரார்த்தனை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அ.தி.மு.க அரசின் இந்த 7 ஆண்டு ஆட்சியில் தமிழகம் பெற்றுள்ளதாக கூறினார். இதே வளர்ச்சி மீண்டும் மத்தியிலும் கிடைக்க வேண்டி அ.தி.மு.க – பாஜக கூட்டணி  வெற்றி பெற இந்த பிரார்த்தனை செய்ததாக குறிப்பிட்டார்.

Tags
Show More
Back to top button
Close
Close