தமிழ் நாடு

58% GoBackModi ட்வீட்டுகள் பாகிஸ்தானில் இருந்து பகிரப்பட்டவை, அதில் 23% உருது மொழி ட்வீட்டுகள் – அதிர்ச்சி தகவல்கள்!

மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி தமிழக வளர்ச்சிக்கான ₹40,000 கோடி திட்டங்களை தொடக்கி வைத்துள்ளார்.  

கன்னியாகுமரியில் ₹2,995 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார். மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை 4 வழித்தடங்களாக விரிவுபடுத்தியதை நாட்டிற்கு வழங்கினார். மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் இணைப்புகளில் மேம்பாலம் திட்டத்தை தொடங்கிவைத்தார். மதுரை – சென்னை இடையேயான தேஜஸ் அதி விரைவு ரயில் சேவையையையும் தொடக்கி வைத்தார்.

வழக்கம் போல எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலேயே தி.மு.க-வினர் கோ பேக் மோடி ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்தனர். ஆனால் இந்த ட்ரெண்டிங் நிஜமாகவே எங்கிருந்து செய்யப்பட்டது என்று பார்த்தால் அதிர்ச்சி அளிக்கிறது.

My Nation பத்திரிக்கையின் ஆசிரியர், அபிஜித் ட்விட்டரில் இந்த தகவலை தெரிவித்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நன்றாக கூட்டணி அமைந்துள்ளது என்று பதிவிட்டார்.

Tweet by @abhijithmajumder

இதை தொடர்ந்து, ட்விட்டர் ட்ரெண்டிங் லொகேஷனை பாகிஸ்தான் என்று மாற்றி ட்விட்டர் வாசிகள் சோதித்து பார்த்தனர். அதிர்ச்சி அளிக்கும் தகவலாக கோ பேக் மோடி என்ற ஹேஷ் டேக் பாகிஸ்தானில் ட்ரெண்ட் ஆவது கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு, இதை தீவிரமாக ஆராய்ச்சி செய்து பார்த்துள்ளார் ட்விட்டர் வாசி ரங்கநாதன் அவர்கள். அதன் பிறகு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் மேலும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

கோ பேக் மோடி ஹேஷ் டேகில் பாகிஸ்தானில் இருந்து 58% கீச்சுகளும், இந்தியாவிலிருந்து 22% கீச்சுகளும், சென்னையில் இருந்து வெறும் 4% கீச்சுகள் தான் பதிவிடப்பட்டது.

Country, City and Language based trend analysis as tweeted by @ranganaathan
Map based trend analysis. Tweet by @ranganaathan

23% கீச்சுகள் உருதுவிலும், ஆங்கிலத்தில் 62% கீச்சுகளும், தமிழில் வெறும் 2% கீச்சுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் தி.மு.க-வினர் தொடர்பு வைத்துக்கொண்டு கோ பேக் மோடி ட்ரெண்டிங் செய்துள்ளனரா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு இந்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close