இந்தியா

அபினந்தனை சந்தித்து நலம் விசாரித்தார் நிர்மலா சீத்தாராமன்.!

பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுதலை பெற்று இந்தியா வந்துள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து பேசினார். மருத்துவமனையில் சந்தித்த நிர்மலா அபிநந்தனிடம் நலம் விசாரித்தார். அப்போது அபிநந்தன் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

 பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கிய விங் கமாண்டர் அபிநந்தன், நேற்று முன்தினம் இரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்த அபிநந்தனை, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது அவரது உடல் நிலை குறித்து நிர்மலா சீதாராமன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்திய விமானப் படையின் தலைமை தளபதி பிரேந்தர் சிங் தனோவாவை அபிநந்தன் சந்தித்துப் பேசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டது குறித்தும், அவர்கள் நடத்திய விதம் தொடர்பாகவும் அபிநந்தன் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. விமானப் படை அதிகாரிகள் விடுதியில் அபிநந்தன் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close