ஊடக பொய்கள்

இவர் தான் அபிநந்தனின் மனைவி என்று போலி செய்தியை பரப்பும் ஊடகம்

ஆன்லைன் ஹிந்தி பத்திரிகையான யுவ தேஷ், போலி வீடியோ ஒன்றை பரப்பி வருகிறது. அந்த வீடியோவில், அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஒரு பெண் ஆவேசமாக பேசுகிறார்.

அந்த பெண்ணை விமானப்படை மாவீரர் அபிநந்தன் வர்தமானின் மனைவியாக சித்தரித்துள்ளது யுவ தேஷ் என்ற ஊடகம். பிப்ரவரி 28 ம் தேதி வெளியிடப்பட்ட வீடியோவை இதுவரை 1,93,000 பேர் கண்டுள்ளனர். அதில், “அரசியல் தலைவர்கள்” எங்கள் வீரர்களின் தியாகத்தை அரசியல் மையப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார். அவர் தன்னை “இராணுவ அதிகாரியின் மனைவி” என்று அழைத்துக் கொள்கிறார்.

ஆனால் அவரை “அபிநந்தன் கி பட்னி” (அபிநந்தனின் மனைவி) என்று யுவ தேஷ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அந்த பெண் தன்னை “இராணுவ அதிகாரியின் மனைவி” என்று கூறிக்கொள்ளும் போது அவர் பேசுவதின் நோக்கமும் அதன் உண்மை தன்மையையும் அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். இதற்கு ஒரு படி மேலே போய் விட்டது யுவ தேஷ் ஊடகம்.

மாவீரர் அபிநந்தன் இந்திய விமானப் படையின் போர் விமானி ஆவார். பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை துரத்தி வீழ்த்தியுள்ளார். ராணுவத்திற்கும் விமானப்படைக்கும் வித்யாசம் தெரியாதவர்கள் தான் அந்த ஊடகத்தில் இருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்க விஷயமே.

இது தான் வாய்ப்பு என்று காங்கிரஸ் கட்சியினரும் காங்கிரஸ் ஆதரவாளர்களும் இந்த காணொளியை பரப்பி அரசியல் செய்து வருகின்றனர்.

இந்த போலி செய்தியை பாகிஸ்தானிய ஊடகங்களும் பரப்பி வருகிறது.

அபிநந்தனின் மனைவி தன்வி மர்வாஹா ஒரு ஓய்வுபெற்ற படைத் தலைவர். 2004 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் அபிநந்தனுடன் சக வீரராக அவர் மனைவி பணிபுரிந்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close