இந்தியா

பஞ்சாப் எல்லையில் நடமாடிய பாகிஸ்தான் உளவாளி – வெளியான திடுக்கிடும் தகவல்.!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலக்கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இதற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள்  எந்த நேரமும் பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இதனால் டில்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள சில நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள ராணுவ பகுதிகள், விமான தளங்கள், அணு உலைகள் ஆகியவற்றில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவத்தினர் தீவிர ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாப் எல்லையில் நடமாடிய பாகிஸ்தான் உளவாளியை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். கைதானவர் உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் நகரை சேர்ந்தவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து பாகிஸ்தான் சிம்கார்ட் பொருத்தப்பட்ட மொபைல் போனையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து சோதனை செய்ததில், அந்த சிம்கார்ட் மூலம் பாகிஸ்தானில் உள்ள 8 குழுக்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close