தமிழ் நாடு

விமான வசதியில் ஒரு அதிவிரைவு ரயில் சேவை – தமிழகத்துக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி..!

மதுரை- சென்னை இடையே அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அப்போது மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்ட அதிவிரைவு தேஜஸ் ரயில் சேவையை வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடங்கி வைத்தார்.
இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு கருவிகள், தீ தடுப்பு அலாரம், தானியங்கி கதவுகள், சொகுசு இருக்கைகள், நவீன கழிவறைகள், இருக்கையில் எல்.இ.டி. திரை வசதி, உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

இந்த ரயில் மதுரையிலிருந்து தினமும் மாலை 3 மணிக்கு புறப்படும். கொடைரோடு, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். விழாக்கிழமை தவிர பிற நாட்களில் இந்த அதிநவீன சொகுசு ரயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close