இந்தியா

இம்ரான்கான் திடீரென புத்தர் வேஷம் போட்டுக் கொண்டு இந்தியாவிடம் இறங்கி வந்த பின்னணி இதுதானாம்..!

ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்ய இந்தியா எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் சீனாதான் முட்டுக்கட்டை போட்டு வந்தது. நாம் என்ன செய்தாலும் சீனா தன்னை ஆதரிக்கும் என்று பாகிஸ்தான் நம்பி இருந்தது.

ஆனால் இப்போது இந்தியா பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தியதைச் சீனா தீவிரமாக கண்டிக்காததும், இந்தியாவுக்கு ஆதரவாக சீனா பேசியதும் பாகிஸ்தான் இறங்கிவர ஒரு காரணமாக பார்க்கப்படுகிறதது.

சீனா பாகிஸ்தானை ஆதரிக்காததற்கு முதல் காரணம் சீனாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இந்தியாவில் கொட்டிகிடக்கும் பிரம்மாண்ட சந்தை வாய்ப்புகள். இந்தியர்கள் சீனப்பொருட்களை வாங்கிக் குவித்து வரும் நிலையில் இந்த நேரத்தில் பாகிஸ்தானை ஆதரித்தால் சீனப் பொருள்களுக்கு எதிரான பிரச்சாரம் இந்தியாவில் அதிகமாகி விடும்.

இதனால் சீனப் பொருள்களின் வியாபாரம் இந்தியாவில் படுத்துவிடும். ஆனால் பாகிஸ்தானால் சீனாவுக்கு ,மிகப்பெரிய நன்மை எதுவும் கிடையாது. பாகிஸ்தானால் சீனாவுக்கு செலவுதானே ஒழிய மிகப்பெரிய நன்மைகள் கிடையாது. எனவே இந்திய  சந்தையை இழக்க சீனா தயாரில்லை.

இரண்டாவது காரணமாக பார்க்கப்படுவது சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு ‘ திட்டம். இது ஒரு சீனாவின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நகரங்களை மேற்கு ஆசியா, மத்திய ஆசியா வழியாக மற்ற உலக நாடுகளுடன் அமைத்து வரும் வர்த்தக சாலை திட்டம் ஆகும்.

உலகின் முக்கிய சந்தைகளை ஒரு வலைப்பின்னல் போல இணைக்கவிருக்கும் இந்த சாலையை பெரும் பொருட் செலவில் சீனா அமைத்து வருகிறது.

இது ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே செல்வதால் இந்தியா இந்தத் திட்டத்தை எதிர்க்கிறது. 160 பில்லியன் டாலர் திட்ட மதிப்பீடு கொண்ட இத்திட்டத்தை இந்தியா எதிர்ப்பதால் எப்படியாவது இத்திட்டத்துக்கு இந்தியாவை சம்மதிக்க வைக்க சீனா பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த சாலை அமைப்பு திட்டத்துக்கு ஆதரவைத் திரட்ட வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பெல்ட் அண்ட் ரோடு மாநாட்டை நடத்தப்போகிறது சீனா.

இதில் பங்கேற்க 130 நாட்டு பிரதிநிதிகளை வரவழைக்கவுள்ளது. ஏற்கனவே இது போல சீனா கூட்டிய கூட்டத்தில் தன் இறையாண்மை பாதிக்கப்படுவதாகக் கூறி மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா புறக்கணித்தது.

இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு தனக்கு முக்கியம் எனக் கருதும் சீனா தற்போதைய இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு உதவிடவில்லை. ஆதரவும் தரவில்லை. மேலும் இந்தியாவுக்கு ஆதரவாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவிதததால் பாகிஸ்தான் ஏமாற்றம் அடைந்தது.

தன்னை உலகில் எந்த நாடும் ஆதரிக்காத நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்தான் இம்ரான் கான் தற்போது இறங்கி வந்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் நேற்று நல்லிணக்கம், அமைதி குறித்து பேசியதன் காரணம் இதுதானாம்.

உண்மையில் இம்ரான்கானுக்கோ  அல்லது பாகிஸ்தான் இராணுவத்துக்கோ நல்லிணக்கம் இருந்தால், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா அளித்த 13 நாள் அவகாசத்தில் பயங்கரவாதிகள் விஷயத்தில் ஒரு சிறிய நடவடிக்கையாவது எடுத்திருக்கலாம்.

ஆனால் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாமல், இந்தியாவுக்கு எதிராக வீம்பு பேச்சு பேசி வந்ததால்தான் இந்தியா எல்லை தாண்டி நடவடிக்கை  எடுக்க வேண்டியதாகிவிட்டது.

இந்தியா எல்லை தாண்டி சென்றாலும் பாகிஸ்தான் இராணுவத்தினர் மீது மோதல் எதையும் செய்யவில்லை. பயங்கரவாதிகளின் முகாம்களின் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்தது. ஆனால் பாகிஸ்தான் பதில் நடவடிக்கை என்று கூறி இந்திய எல்லைப் பகுதிகளிலுள்ள இராணுவத் துருப்புக்கள் மீது தாக்குதல் நடத்திவருவது தேவையற்ற ஓன்று என அனைத்து நாடுகளும் கருதுகின்றன.

பாகிஸ்தானை துச்சமாகக் கருதி இந்தியாவுக்கு உலக நாடுகள் வெளிப்படையாக இவ்வாறு ஆதரவு தெரிவித்ததால் பயந்து போன இம்ரான்கான் கடைசியில் அமைதி…நல்லிணக்கம் என பேசிக்கொண்டு இறங்கி வந்ததும், அபினந்தனை உடனடியாக, நிபந்தனை எதுவுமில்லாமல் விடுவிக்க இதுதான் காரணங்கள் என கூறப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close