இந்தியா

வாகா வந்தார் வான் வீரன் – உற்சாக பெருக்கெடுப்பில் இந்திய மக்கள் : ஊற்றெடுக்கும் தேசப்பற்று..!

இரு தினங்களுக்கும் முன் பாகிஸ்தான் போர் விமானங்களை எல்லையில இந்திய போர் விமானங்கள் விரட்டி அடித்தன. இந்த தாக்குதலின் போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் சிறைப்பிடித்தது.

இதனையடுத்து இந்திய அரசு மற்றும் உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும், ஜெனிவா ஒப்பந்தத்தின்படியும், போர்க் கைதியாக பிடிபட்டுள்ள அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்கபடுவதாக பாகிஸ்தான் அரசு நேற்று அறிவித்தது.

அதன்படி, அபினந்தன் ராவல்பிண்டியில் இருந்து விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டார். பின் அங்கிருந்து இன்று மதியம் வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, நேற்று இரவே வாகா எல்லைக்கு புறப்பட்ட அபிநந்தனின் தந்தை மற்றும் உறவினர்கள் இன்று வாகா அபிநந்தன் வருகைக்காக காத்திருக்கின்றனர். மேலும், அவரை வரவேற்பதற்காக ராணுவ அதிகாரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் வாகா எல்லைக்கு சென்றுள்ளனர்.

இதேபோல், வாகா எல்லையில் ஒன்று கூடிய இந்திய மக்கள் அபினந்தனின் வருகைக்காக, ஆரவாரத்துடன், விண்ணை பிளக்க ஜெய் ஹிந்த்.. ஜெய் ஹிந்த்.. என்ற கோஷமிட்டு வருகின்றனர். மேலும் அவரை வரவேற்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவுகள் இட்டுவருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானி அபிநந்தன், சற்று நேரத்தில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து பல தடைகளை தாண்டி ஒட்டுமொத்த இந்தியர்களின் பிராத்தனை பலனாக தாய் மண்ணில் கால் பதித்துள்ளார் அபிநந்தன்.

Tags
Show More
Back to top button
Close
Close