இந்தியா

தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதை தவிர்க்க நடவடிக்கை..!

பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 31 எம்.பி.க்களை கொண்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான நிலைக்குழு சமீபத்தில் டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தின் உலக பொதுக் கொள்கை பிரிவு துணைத்தலைவர் காலின் குரோவெல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

நாடாளுமன்றத் தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு தடுக்கப்படுவதை உறுதிசெய்ய டிவிட்டர் அதிகாரிகளை நேரில் அழைத்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை மேற்கொண்டது.

டிவிட்டரின் பொதுக் கொள்கைக் குழுத் தலைவர் Colin Crowell உள்ளிட்ட அலுவலர்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்ததாகவும் எஞ்சிய கேள்விகளும் 10 நாட்களில் எழுத்து பூர்வ பதில் அளிப்பதாக தெரிவித்ததாகவும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

நிலைக்குழுவின் தலைவர் அனுராக் தாகூர் தலைமையில் இந்த கூட்டம் சுமார் 3½ மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில், டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சே எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து நிலைக்குழு உறுப்பினர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு டுவிட்டர் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சில பிரச்சினைகளை தீர்க்க இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாக அனுராக் தாகூர் தெரிவித்தார்.

அதேபோல, தேர்தலை வலுவிழக்கச் செய்யும் பணிகளில் ஈடுபடுவதோ, தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்றும் டுவிட்டர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக் கூடாது என உறுதிபடத் தெரிவிக்கப்பட்டதாகவும், நடைமுறைப் பிரச்சினைகளை தேர்தல் ஆணையத்துக்கு விளக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

நியாயமான கருத்துத் திணிப்பற்ற தேர்தலை உறுதி செய்ய சமூக வலைதள நிறுவனங்கள் கணத்துக்குக் கணம் தேர்தல் ஆணையத்துடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் மார்ச் 6-ஆம் தேதி நேரில் ஆஜரக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Tags
Show More
Back to top button
Close
Close