செய்திகள்

பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது ‘உண்மைதான்! ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல்

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது எல்லை கடந்து இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்றும்  ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம், ”இந்தியாவின் போர் விமானங்கள் எல்லை கடந்து பாகிஸ்தானின் முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து இந்தியப் பாதுகாப்புத் துறை, ”பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானங்கள் எல்லை மீறித் தாக்குதல் நடத்தியது குறித்த தகவல் ஏதும் எங்களிடம் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

இந்த  நிலையில் இந்தியாவின் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர், ”முஸாஃபராபாத் துறைமுகத்தில் இந்திய விமானங்கள் ஊடுருவித் தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்றார். ஆனாலும் சேத விவரங்கள் குறித்து அவர் தெரியப்படுத்தவில்லை. என்றாலும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் முகாம்கள் அழிக்கப்பட்டது உண்மைதான் என்றும் அது குறித்த விபரங்கள் ஆதாரத்துடன் விரைவில் தெரியவரும் என கூறியுள்ளது.  

Tags
Show More
Back to top button
Close
Close