இந்தியா

யாசின் மாலிக் கைதை தொடர்ந்து காஷ்மீரில் பதற்றம் : துணை ராணுவப் படையினர் காஷ்மீரில் குவிப்பு: விமானங்கள் மூலம் வீரர்கள் பறந்தனர்

பிரிவினைவாதிகளின் தலைவன் யாசின் மாலிக் கைதை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால், ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு, 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆகாய மார்க்கமாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் (Yasin Malik) கைதை தொடர்ந்து தலைநகரில் பதற்றம் சூழ்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, அம்மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவசரமாக துணை ராணுவப் படையினரை அங்கு அனுப்பி வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதை அடுத்து 100க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவப் படையினர், ஆகாய மார்க்கமாக ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரு கம்பெனி என்பது 80 முதல் 150 வீரர்களைக் கொண்ட குழுவாகும்.முன்பு தரை மார்க்கமாக மிகப்பெரிய டிரக்குகளில் வீரர்களை அனுப்பிவைப்பார்கள்.

தற்போது புல்மாவா தாக்குதலை அடுத்து இனி விமானம் மூலமே காஷ்மீருக்கு துருப்புகளை அனுப்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் பல விமானங்கள் மூலம் வீரர்கள் காலதாமதமின்றி காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இனி சொந்த ஊரிலிருந்து டெல்லி வந்து காஷ்மீர் திரும்பும் வீரர்களும் விமானம் மூலமே அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close