சிறப்பு கட்டுரைகள்

வடிவேலுவை ஏவி விட்டு அழிக்க நினைத்தவர்களை மறக்க முடியவில்லை.! தாமதம் ஆனாலும் தலைவர் நல்ல முடிவெடுப்பார்: தேமுதிக தொண்டர்கள் நம்பிக்கை.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக, திமுக கூட்டணி எதிலும் சேருவதற்கான முடிவு எதையும் எடுக்காமல் நாற்பது தொகுதிகளுக்கும் தங்களது கட்சியினரிடமிருந்து  விருப்ப மனுக்கள் பெற மேற்கொண்டுள்ள முடிவு குறித்து கட்சியினர் வியப்பையும், தங்கள் கருத்தையும் தெரிவித்துள்ளனர். திமுக குறித்தும் தங்கள் விருப்பத்தை கூறிவருவதாக கூறப்படுகிறது..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் மிக பெரிதாக எதிரொலிக்கவில்லை.

தலைவர் விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் பழையபடி திரும்பி நல்ல வழி காட்டுவார் என்றே நம்பி வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கோலோச்சிவந்த மாபெரும் தலைவர்களாக இருந்த ஜெயலலிதா , கருணாநிதி ஆகியோர் தற்போது இல்லாத நிலையில், ரஜினிகாந்த் போல மீண்டும் உடல்நிலை சரியாகி அரசியலில் மிகுந்த ஆர்வம் காட்டுவார் என்ற நம்பிக்கை இன்றைக்கும் தொண்டர்களிடையே உள்ளது.

சிகிச்சைக்காக அமேரிக்கா சென்ற தலைவர் திரும்பி வருவது எப்போது என ஆவலுடன் காத்திருந்தனர். விஜயகாந்தும் நல்லமுறையில் திரும்பியும் வந்துவிட்டார்.

இந்த நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலை அடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. அதிமுக – பாஜக அணி, திமுக- காங் அணி இரண்டுமே கிட்டத்தட்ட அமைந்துவிட்டன.

தேர்தல் கூட்டணி குறித்து அனைத்து கட்சிகளிடமும் பேசி வருகிறோம் என்று தேமுதிக தரப்பில் கூறப்பட்டாலும் அதிமுக- பாஜக மட்டுமே விஜயகாந்தை விரும்பி தங்கள் கூட்டணிக்கு அழைப்பதாக கூறப்படுகிறது. தொகுதிகள் தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் டெல்லியிலிருந்து தமிழகம் வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தங்களது கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்றார். பாஜகவினர் சென்று சந்தித்துவிட்டு வந்த பிறகே உள்ளூரிலிருந்த ரஜினிகாந்த், திருநாவுக்கரசர், மு.க ஸ்டாலின் சென்று பார்த்துவிட்டு வந்துள்ளனர்.

தேர்தல் கூட்டணி குறித்து அனைத்து கட்சிகளிடமும் பேசி வருகிறோம் என்று தேமுதிக தரப்பில் கூறப்பட்டாலும் தேமுகவுடன் நாங்கள் இதுவரை பேச்சு நடத்தவில்லை என ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு வந்த ஸ்டாலினும் விஜயகாந்த் “ கலைஞர் கருணாநிதி மீது பேரன்பு கொண்டவர்” என கூறினார்.

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை வழங்குவது தொடர்பாக தேமுதிக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்போர், வரும் 24ம் தேதி முதல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

விருப்ப மனுக்களை அடுத்த மாதம் 3ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தொண்டர்களிடையே திகைப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் தங்களுக்கு பொருத்தமான கூட்டணி தற்போதைய நிலையில் பாஜக- அதிமுகதான் என்றும், அந்த கூட்டணியில் சேர்வதுதான் தங்கள் எதிர்காலத்துக்கு உசிதமானது, கவுரவமானது என்றும் அவர்கள் கருதுவதாக தெரிகிறது.

ஏனெனில் ஜெயலிதா உயிருடன் இருந்தபோது காவல் துறையை கையில் வைத்துக் கொண்டு தங்களது தலைவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இப்போதைக்கு ஜெயலிதா மறைவுக்குப் பின் களம் மாறியுள்ளது.

என்றாலும் கடந்த 2011 சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியும், திமுகவும் தங்கள் தலைவரின் அரசியல் செல்வாக்கை மட்டுமன்றி, அவரின் தனிப்பட்ட புகழையும், செல்வாக்கையையும் குலைக்கும் வகையில் காமெடி நடிகர் வடிவேலுவை வைத்து மிகவும் கீழ்த்தரமான விமரிசனங்களை முன்வைத்ததை தேமுதிக தொண்டர்கள் இன்னும் மறக்கவில்லை.

அரசியல் பண்பாடு, நாகரீகம் இன்றி திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கூட்ட மேடைகளில் தங்கள் கண் எதிரிலேயே வடிவேலுவை ஏவிவிட்டு தரம் தாழ்ந்து பேசியவற்றை கைகொட்டி ரசித்தனர்.

இது இந்தியாவில் வேறு எங்கிலும் நடக்காத அரசியல் அநாகரிக செயல்கள் ஆகும். இது போன்ற பண்பற்ற முறையில் வேறு கட்சிகள் எதுவுமே நடந்து கொண்டதில்லை.

ஒரு பழுத்த அரசியல் தலைவர் பக்குவமோ, நாகரீகமோ இல்லாமல் பிற அரசியல் தலைவர்களை கேவலப்படுத்தி, அரசியல் அரங்கத்தில் இருந்தே ஓரங்கப்படவேண்டும் என்ற கொடிய நோக்கத்துடன்  அவர்கள் போட்ட கீழ்த்தரமான செயல்களை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.

திமுக தலைமையின் இந்த செயல் வெறும் அரசியல் எதிர்ப்பு நடவடிக்கை மட்டுமல்ல. விஜயகாந்த என்ற மனிதரை வேரோடு பிடுங்கி எறிந்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் அந்த கேவல விமர்சனங்கள்.

அன்றைக்கு அதே கூட்ட மேடையில் இருந்து கொண்டு தங்களை மிகவும் ஒழுக்கமானவர்கலாகக் கருதிக் கொண்டு மனசாட்சியை தொலைத்துவிட்டு, கைதட்டி ரசித்தவர்தான் இந்த ஸ்டாலின், இன்றைக்கு தனது தந்தையின் மீது பக்தி கொண்டவர் விஜயகாந்த் என ஸ்டாலின் கூறுவது ஏற்றுக் கொள்ளமுடியாதது என்றும் கூறுகின்றனர்.

இதற்கு முந்தைய தேர்தல்களில் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களின் போக்கைக் கொண்டே வாக்காளர்கள் பலர் முடிவெடுத்தனர். ஆனால் இன்று அவர்கள் இல்லை. வாக்காளர்கள் தனது சொந்த சிந்தனையை வைத்து நாட்டுக்கும், வீட்டுக்கும் நன்மையை தரக்கூடிய நல்ல முடிவை எடுக்கவுள்ளனர்.

தமிழக இளைஞர்களை பொறுத்தவரை வேலை வாய்ப்பு பரவலாக்கப்படவில்லை என்ற கோபத்தை பிரதமர் மோடி மீது வெளிப்படுத்தினாலும், சற்று தாமதமானாலும் அவரால் மட்டுமே நல்லது செய்ய முடியும் என நினைக்கின்றனர்.

அவரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால பயனுள்ள திட்டங்கள் நன்மையை தர தொடங்கியுள்ளன. அதே சமயம் பாஜகவின் வேகம் மற்றும் விவேகத்துடன் தேச, மாநில நன்மைகளுக்காக இணைந்து செல்லும் குணத்துடன் அதிமுகவினர் உள்ளனர்.

இது மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பாஜகவும் தங்கள் தமிழக பலம் பற்றி மிகப் பெரிதாக எடை போட்டுவிடாமல் குறைந்த இடங்கள் கிடைத்தாலும், நிறைந்த மனதுடன் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் விரும்பும் வழியில் நாமும் சென்று மீண்டும் கட்சியையும், தலைவரது உடல் நலனையும் மீண்டும் மறுமலர்ச்சி அடைய செய்ய வேண்டும் என
தேமுதிக தொண்டர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.  

Tags
Show More
Back to top button
Close
Close