தமிழ் நாடு

ஆட்டோ விபத்து.. பச்சிளங்குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.!

சென்னை அயனாவரம் சாலையில் ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த 3 மாதம் ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வேலன், இவர் தனது மனைவி அர்ச்சனா மற்றும் குழந்தை யோகேஷ் ராஜ் ஆகியோருடன் அயனாவரத்திலிருந்து கொன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிரே வந்த டூ வீலர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பியுள்ளார்.

இந்த விபத்தில் ஆட்டோ பின்னால் இருந்த மனைவி அர்ச்சனா குழந்தையும் கீழே விழுந்துள்ளனர். இதில் அர்ச்சனா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close