தமிழ் நாடு

பாமகவை விட குறைந்த இடங்களை ஒப்புக் கொண்டது ஏன் ? மத்திய அமைச்சர் பொன்.இராதா கிருஷ்ணன் விளக்கம்

பாமாகவைவிட பாஜகவுக்கு குறைந்த அளவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து பலர் வியப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாஜக இந்த அளவுக்கு குறைந்த அளவில் இடங்களை பெறலாமா என்பதுகுறித்தும் பாஜக கட்சியினர் வருத்தம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம்  கூறியதாவது: தேமுதிகவுடன் கூட்டணி குறித்து அதிமுகதான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார் என  நம்புகிறேன்.  அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 இடங்களும், பாமகவுக்கு 7 இடங்களும் அளித்துள்ளதை கூட்டணி என்ற கண்ேணாட்டத்தில்தான்  பார்க்கிறேன்.

கன்னியாகுமரி தொகுதியில், 1998 முதல் பா.ஜனதாவில் யாரும் போட்டி போட  கேட்கவில்லை. இதனை வைத்துதான் தளவாய்சுந்தரம் என்னை கன்னியாகுமரி  வேட்பாளராக கூறியிருக்கலாம்.

குமரியில் கடந்த 4 ஆண்டுகளாக அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.  எனவே மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பினருமே பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.  இவ்வாறு அவர் கூறினார். 

Tags
Show More
Back to top button
Close
Close