2019 தேர்தல்

தேமுதிக தனித்து போட்டியா? 40 தொகுதிக்கு விருப்ப மனு வாங்க முடிவு.!

தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

அதே போல் திமுகவும் காங்கிரசுடன் கூட்டணியை அமைத்து அதிரடி காட்டியது.
அதே போன்று தேமுகதிகவும் எந்த அணிக்கு செல்கிறது என்று தமிழக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பான பேச்சுகள் எழுகின்றது.

மேலும், தேமுதிக சார்பில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதிமுக தேமுதிக எதிர்பார்க்கின்ற தொகுதியை அளிக்க முடியாது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தேமுதிக 40 தொகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகளிடையே விருப்ப மனுவை வாங்குவதற்கு அறிவுப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்கள் அணிக்குள் எப்படியாகவது தேமுதிகவை இணைக்க வேண்டுமென கூட்டணி கணக்கு வகுத்து வருகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close