தமிழ் நாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்..!

சென்னை சாலிகிராமம் இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்திதார். இந்த சந்திப்பின் போது தேமுதிக திமுக அணிக்குள் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;

நான் சிங்கப்பூரில் இருந்து சிகிச்சை முடித்து சென்னை வந்தபின் முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த். அதே போன்று விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடித்து வந்தவுடன் அவரின் உடல் நலம் பற்றி விசாரித்தேன்.

மேலும், தன்னுடைய அரசியல் நிலவரம் பற்றி ஏற்கெனவே தெரிவித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close