தமிழ் நாடு

அடமானமில்லா விவசாயக் கடனுக்கான உச்சவரம்பு தொகை அதிகரிப்பு..!

விவசாயிகளுக்கு வங்கிகளால் வழங்கப்படும் அடமானமில்லா விவசாயக் கடனுக்கான உச்சவரம்பு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.60 லட்சமாக பாரத ரிசர்வ் வங்கியினால் உயர்த்தப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாயக் கடன்களை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து நடப்பு ஆண்டு வரையுள்ள பணவீக்கம் மற்றும் விவசாய இடு பொருள்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விவசாயிகளால் அடமானமில்லா விவசாயக்கடனின் உச்சவரம்புத் தொகையை உயர்த்துமாறு தொடர்ந்து பல விதங்களில் கோரப்பட்டதைத் தொடர்ந்து இத்தொகை ரூ.1.60 லட்சத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

எனவே உயர்த்தப்பட்ட இக்கடன் தொகையை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதி அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்று விவசாயத்தில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close