தமிழ் நாடு

ஏழை தொழிலாளர்களுக்கு ரூ. 2000 வழங்கும் திட்டம்: வரும் 24ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தொடங்குகிறது.!

ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. 

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் எடப்படி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். 

 அதன்படி இத்திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். 

பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 28 க்குள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் பேரின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2000 சிறப்பு நிதி செலுத்தப்பட உள்ளது. முன்னதாக இத்திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது. 

Tags
Show More
Back to top button
Close
Close