செய்திகள்

ஜெயலலிதா, பிரதமர் மோடி கனவை நிறைவேற்ற உழைப்போம்: பியூஷ் கோயல்

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்து இரு கட்சிகள் இடையே 2 ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை நந்தனம் கிரவுன்பிளாசா ஓட்டலில் நடந்தது. இங்கு பியூஷ் கோயலுடன் இ.பி.எஸ்., பேச்சு நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜ.க சார்பில், பியூஷ் கோயல், தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன், அ.தி.மு.க சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். இன்றைய பேச்சில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது எனவும் யாருக்கு எத்தனை தொகுதிகள் எனவும் முடிவானது. இதன்படி லோக்சபா தேர்தலில் பா.ஜ.க வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் பேசுகையில்: 2019 பொதுத்தேர்தலில் அதிமுகவும்,. பா.ஜ.க வும் வெற்றிக்கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதுஎன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு கட்சிகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பா.ஜ.க வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பியூஷ்கோயல் நிருபர்களிடம் பேசுகையில்: பார்லி., தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். இது போல் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பா.ஜ.க ஆதரவு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது என்றார். இந்த கூட்டணி குறித்து ஜெயலலிதாவின் ஆன்மா மகிழ்ச்சி அடையும், அவர் கனவையும், பிரதமர் மோடி கனவையும் நிறைவேற்ற உழைப்போம் என கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close