ஊடக பொய்கள்

காஷ்மீர் மாணவிகள் தாக்கப்படுவதாக போலி செய்தியை பரப்பிய ஷீலா ரஷீத் மீது எப்.ஐ.ஆர் பதிவு

ஷீலா ரஷீத் என்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி, சனிக்கிழமை மாலை, சமூக ஊடகங்களில், மத கலவரத்தை தூண்டும் நோக்கில், போலி செய்தியை வெளியிட்டார். “15-20 காஷ்மீரி பெண்கள் டெஹ்ராடூனில் உள்ள டால்பின் கல்லூரியில் விடுதி ஒன்றில் சிக்கிக்கொண்டுள்ளனர் என்று பதிவிட்டார். இந்த செய்தியை பிரிவினவாதிகள் பலரும் பரவலாக பகிர்ந்தனர்.

“டெஹ்ராடூனில் உள்ள ஒரு ஹாஸ்டலில் 15-20 காஷ்மீர் பெண்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோஷத்தை அங்கு இருக்கும் கும்பல் ஒன்று எழுப்பி வருகிறது. காவல்துறையால் கும்பலை கலைக்க முடியவில்லை”, என்று விஷமத்தனமாக பதிவிட்டார்.

இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்தது.

இந்த போலி செய்தியை பலர் சுட்டிக்காட்டியும் அதை நீக்காமல் அந்த செய்தியை வேண்டுமென்றே மேலும் பரப்பிக்கொண்டிருந்தார் ஷீலா ரஷீத்.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் (JNU) மாணவி ஷீலா ரஷீத் பரப்பிய இந்த போலி செய்தியை அடுத்து அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஷீலா ரஷித் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close