இந்தியா

விமர்சனங்களை தகர்த்தெறிந்து முதல் வர்த்தக பயணத்தை தொடங்கியது இந்தியாவின் அதிவேக இரயில்..!

நாட்டின் அதிவேகமான, பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் வர்த்தக பயணத்தை இன்று தொடங்கியது.

டெல்லியில் இருந்து இன்று வாரணாசிக்கு புறப்பட்டுச் சென்றது. அடுத்த இரு வாரங்களுக்கு இந்த ரயிலின் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவுசெய்யப்பட்டுள்ளன. பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை தயாரித்தது. ரயிலில் இன்ஜின் இல்லாமல் அதிவேகமாக இயங்கக்கூடிய இந்த ரயிலுக்கு வந்தே பாரத் எனப் பெயரிபட்டது.டெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசி வரையிலான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் ரயில் தொடங்கியது.

டெல்லியில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக வாரணாசி சென்றடைந்த நிலையில், வாரணாசியில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்தது. அப்போது, டெல்லிக்கு முன்பாக 200 கி.மீ. தொலைவில் டுன்ட்லா எனும் இடத்தில் ரயில் பழுதடைந்து நின்றது. இந்தப் பழுதுக்கான காரணம் என்ன என்று உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ரயிலை 40 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்க முடியாமல் நின்றது. மேலும், பெட்டிகளில் மின்சாரம் செல்வதிலும் தடை ஏற்பட்டது. இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள், அதிகாரிகள், உள்ளிட்டோர் வேறு ரயிலுக்கு மாற்றப்பட்டனர்.இந்நிலையில், ரயிலில் இருந்த பழுது நீக்கப்பட்டு இன்றுமுதல் தனது முதல் வர்த்தக பயணத்தை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கியது. 

வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்? 
ரயில்வே அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரயில் எதற்காகப் பாதி வழியில் நின்றது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘ ரயிலின் கடைசி நான்கு பெட்டிகளுக்கிடையேயான தொடர்பில் சிக்கல் இருந்தது மட்டுமின்றி வெளியில் இருந்து ஏதோ ஒரு பொருள் தாக்கியிருக்கிறது. அதன் காரணமாக ரயிலின் பாதுகாப்பு அமைப்பானது உடனடியாகச் செயல்பட்டு பிரேக்கை இயக்கியிருக்கிறது. அதன் பின்னர் புது டெல்லியில் இருக்கும் பராமரிப்பு மையத்துக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டு பழுதுகள் சரி செய்யப்பட்டன. எனவே, ரயில் திட்டமிட்டபடி இயங்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close