செய்திகள்

சர்வதேச வளர்ச்சியில் முக்கிய பங்கு – தென் கொரியாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக வரும் 21-ஆம் தேதி பிரதமர் மோடி தென் கொரியா செல்கிறார். அவரது இப்பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் மூன் ஜேயை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந்நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் வளர்ச்சிக்கு சிறந்த பங்களித்ததற்காக பிரதமர் மோடிக்கு, சியோல் அமைதி விருது வழங்கப்படும் என கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியாவில் வரும் 22-ஆம் தேதி பிரதமர் மோடிக்கு, சியோல் அமைதி விருது வழங்கப்படுகிறது. இந்திய – கொரிய தொழிற்துறை அமைப்பிலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close