தே.தி.மு.க தலைவர் விஜயகாந்த் கடந்த 2 ஆண்டுகளாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். சென்னை மருத்துவமனையில் நீண்ட நாள் தங்கி சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் மருத்துவர்கள் ஆலோசனையின்படி கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். 2 மாதங்களாக அங்கு தங்கி இருந்து மேல் சிகிச்சை பெற்றார். அவருடன் அவரது குடும்பத்தினரும் சென்றிருந்தனர். அவருக்கு படிப்படியாக உடல்நிலை சரியாகி வருவதாக கூறி வந்தனர். இந்த மாத கடைசியில் திரும்புவார் என செய்திகள் வந்தன. 

இந்த நிலையில் மேல் சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வரும் 16-ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு விஜயகாந்த் தாயகம் திரும்ப உள்ளார் என தே.தி.மு.க அலுவலகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மும்முரமாகி வரும் நிலையில் இதையடுத்து தே.தி.மு.க தொண்டர்கள் குஷி அடைந்துள்ளனர்.

Share