நாடாளுமன்றத்தில் நேற்று  “சிட் பண்ட்” மோசடி தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.  மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ₹30 ஆயிரம் கோடி சாரதா சிட்பண்டு மோசடி போல நாட்டில் இனி நடக்கக் கூடாது என்பதற்காகவே இந்த தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த மோசடியில் மம்தா கட்சியினருக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு. மம்தாவையே தொடர்பு படுத்தி இந்த மோசடியில் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் “சிட் பண்ட்” மோசடி தடுப்பு சட்டம் தொடர்பான மசோதா நேற்று லோக் சபாவில் அறிமுகப்படுத்தியதும் பா.ஜ.க உறுப்பினர்கள் மற்றும் பல கட்சி உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். அப்போது மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பி ஆதிர் ராஜன் சவுத்ரி சாரதா சிட்பண்டு மோசடி விவகாரத்தில் மம்தாவுக்கும் தொடர்பு உள்ளதாக மறைமுகமாக பேசினார். இதற்கு ஆளும் பா.ஜ.க உறுப்பினர்கள் கை தட்டி வரவேற்றனர். இதனால் மம்தா கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு வந்திருந்த மம்தாவும் கடும் கோபமடைந்தார்.

இந்த நிலையில்  மக்களவை வளாகத்தின் செண்ட்ரல் ஹாலில் சோனியா காந்தியும் மம்தா பானர்ஜியும் நேருக்கு நேர் சந்தித்தனர். ஆனால் மம்தா சோனியாவை சட்டை செய்யவில்லை. ஆனாலும் சோனியா மம்தாவை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் அவரை அணுகினார். நாம் இனிமேல் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வது நல்லதல்ல, இனிமேல் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று கூறினாராம். 
அப்போது மிகுந்த கோபத்தில் இருந்த மம்தா பானர்ஜி சோனியா கூறிய சமாதானத்தை ஏற்காமல்,  உங்கள் செயல்களை நான் அறிவேன். உங்கள் செயல்களை நாங்கள் மறக்க மாட்டோம். “நாங்கள் இதனை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுவோம். அதாவது காங்கிரஸ் உறுப்பினர் பேச்சை மறக்க மாட்டோம், உரிய நேரத்தில் பழி வாங்குவோம்” என்ற தொனியில் சோனியாவிடம் கூறியதாக தனியார் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

Share