ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தலைமைத் தணிக்கைக் குழு(சிஏஜி) அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று  தாக்கல் செய்யப்பட்டது. அதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2007-ல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும் 36 போர் விமானங்களின் விலை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் 2.86% குறைவாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

 “ரபேல் விமானங்களை வாங்க 2007-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது, 2016-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒப்பந்தத்தில் குறைந்த விலை, வேகமாக விநியோகம், சிறந்த பராமரிப்பு போன்ற அம்சங்கள் இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் சொல்வது பொய், சிஏஜி சொல்வது பொய், ஆனால் ஒரு பரம்பரையை சேர்ந்தவர் சொல்வது தான் உண்மையா. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் தொடர்ச்சியாக பொய் கூறி வந்தவர்களை, ஜனநாயகம் எவ்வாறு தண்டிக்க போகிறது” என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Share